பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் விதிமுறைக்கு புறம்பாக உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை அருகேயுள்ள பொன்னவராயன்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த வீரசேனன் மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரனிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
பட்டுக்கோட்டை நகரப் பேருந்து நிலையத்துக்கும், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கும் இடையே சுமார் 57 கி.மீ., தூரம் உள்ளது. இந்த சாலையில் மொத்தம் 52 வேகத்தடைகள் உள்ளன.
அரசு விதிகளின்படி 12 மீட்டர் நீளமும், 3.5 மீட்டர் அகலமும் கொண்ட அளவில் தான் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். ஆனால் விதிகளுக்கு புறம்பாக வேகத்தடைகள் தேவையற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வேகத்தடைகள் உள்ள இடங்களில் எந்தவித அறிவிப்பு பலகைகளும் இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே அரசு விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

