தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கு தொடர்பான விசாரணை அக். 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தஞ்சாவூரில் 2012 ஆம் ஆண்டு ஆக. 10ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகளுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதி நந்தகுமார் முன்னிலையில் திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த வழக்கு விசாரணை அக். 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல, இதே நீதிமன்றத்தில் தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலத்தில் 2013ஆம் ஆண்டு ஏப். 4-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தேமுதிகவைச் சேர்ந்த சென்னை விருகம்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி. பார்த்தசாரதி, தலைமை நிலையப் பேச்சாளர் ஏ. ஜெயக்குமார் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. பார்த்தசாரதிக்கு உடல்நிலை சரியில்லை என அவரது வழக்குரைஞர் சான்று வழங்கியதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக். 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

