பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

"மொழிபெயர்ப்பில் மூலக்கருத்தை தெளிவாக அறிவது அவசியம்'

மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொள்ளும்போது, மூலநூலின் மூலக் கருத்தைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொள்ளும்போது, மூலநூலின் மூலக் கருத்தைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் தத்துவ மையம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி.ந. ராமச்சந்திரன் சைவ சமய அறக்கட்டளைக் கருத்தரங்கத்தில் பல்கலைக்கழக முன்னாள் துணைப் பதிவாளர் இரா. சுப்பராயலு பேசியது:

மொழிபெயர்ப்பு என்பது முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, மொழிபெயர்க்க வேண்டும். அதைச் செம்மையாகச் செய்பவர் தி.ந. ராமச்சந்திரன். திருமுறைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமை கொண்டவர் தி.ந. ராமச்சந்திரன். சைவ சித்தாந்தத்தை மொழிபெயர்க்கும்போது அதற்கென தனிக் கலைச்சொல்களை உண்டாக்கிப் பயன்படுத்தினார்.

மொழிபெயர்ப்பு செய்யும்போது உலகப் பண்பாட்டுக் கூறுகளைத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியாக மொழிபெயர்க்க முடியும். மூல நூல்களிலிருந்து மொழிபெயர்க்கும்போது அதில் உள்ள கருத்துகள் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும். மூலக்கருத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இந்தப் பணியை மிகச் சரியாகச் செய்பவர் தி.ந. ராமச்சந்திரன் என்றார் சுப்பராயலு.

பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தெ. விஞ்ஞானம் தலைமை வகித்தார்.

திருவானைக்கா சைவ சித்தாந்தப் பேராசிரியர் எ. பழனியப்பன், தஞ்சாவூர் சைவ சிந்தாந்தப் பேராசிரியர் வீ. ஜயபால் உள்ளிட்டோர் பேசினர்.

அறக்கட்டளை நிறுவனர் - முதுமுனைவர் தி.ந. ராமச்சந்திரன், கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக, தத்துவ மையத் தலைவர் ஜெ. அரங்கசாமி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் கோ.ப. நல்லசிவம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.