எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இயற்கை விவசாய யுக்திகளால் லாபமீட்ட வேண்டும்

விவசாயிகள் இயற்கை விவசாய யுக்திகளைக் கையாண்டு லாபமீட்ட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:58 am

DIN

விவசாயிகள் இயற்கை விவசாய யுக்திகளைக் கையாண்டு லாபமீட்ட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டையில் விவசாயிகளுக்கான மாநில அளவிலான பொருளாதாரத் தன்னிறைவுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.  கோவை மனுநீதி அறக்கட்டளை,  புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்தரங்கை  தொடக்கிவைத்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் பேசியது:
விவசாயிகள் இருக்கும் நீரைப் பயன்படுத்தி, இயற்கை விவசாய யுக்திகளைக் கையாண்டு, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி லாபமீட்ட வேண்டும். அரசு அதிகாரிகள் அரசின் திட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும். நாட்டு இன மாடுகளை அபிவிருத்தி செய்து, விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்றார்.
தலைமை வகித்த மனுநீதி அறக்கட்டளைத் தலைவர் மாணிக்கம் பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வனத் தோட்டக் கழகத்தின் 75,000 ஹெக்டேரில் உள்ள  வனஸ்பதி காடுகள் பல்லுயிர்க் காடுகளாக மாற்றப்பட வேண்டும்.  மாயனூர் அணை மூலம் வெள்ளாறு, அக்கினியாறுகளை இணைத்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு தண்ணீர் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும். உயர் தொழில்நுட்பங்களை கொண்டு இயற்கை வேளாண்மை மூலம் விவசாயிகள் லாபமீட்டி தன்னிறைவு பெற வேண்டும் என்றார்.
ஜி.எஸ். தனபதி, ஆதப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு வேளாண் விற்பனைத் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், கூட்டுறவு இணைப் பதிவாளர் மிருனாளினி, வேளாண் துணை இயக்குநர்  சேட்முகமது அரிமளம் உதவி வேளாண் இயக்குநர் காளிமுத்து, விருத்தி நிறுவன சத்தியமூர்த்தி, கோவை மேக் இந்தியா ராதாகிருஷ்ணன்,  அப்பாவு பாலாண்டார் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் யுக்தி குறித்தான கையேடு வழங்கப்பட்டது. கருத்தரங்கில் சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை உணவுப் பொருட்கள், இயற்கை விவசாய இடுபொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் கண்காட்சி ,விற்பனை நடைபெற்றது.  இயற்கை வேளாண்மையில் 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.