கும்பகோணத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான் அரசைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா எதிரில் பாஜகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  .
Updated on
1 min read

பாகிஸ்தான் அரசைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா எதிரில் பாஜகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  .
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க சென்ற அவரது தாய்,  மனைவி, குழந்தைகளை அந்நாட்டு சிறைத் துறையினர் அவமானப்படுத்தும் விதமாகச் செயல்பட்டனர்.  
இதைக் கண்டித்து பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பினர். மாவட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் திருவேங்கடம், நகரத் தலைவர் கண்ணன், இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலர் பாலா, பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் தாமரை மணி, தாராசுரம் நகரத் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com