காஞ்சிபுரம் சிலை கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கெனவே ஜாமீன் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு புதன்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆரியபெரும்பாக்கத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுந்தரமூர்த்தி நாயனார் ஐம்பொன் சிலை கடத்தல் தொடர்பாக மகேந்திரன், சேகர், தட்சிணாமூர்த்தி, கார்த்திகேயன் ஆகியோரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இதில், மகேந்திரன், சேகர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு கடந்த 22-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கார்த்திகேயனுக்கு பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நீதிபதி புதன்கிழமை ஜாமீன் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.