ஒரத்தநாடு அருகே பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு வட்டம் மேலஉளூர், கீழ உளூர், ஆழிவாய்க்கால், பருத்திக்கோட்டை, சேதுராயன்குடிக்காடு அதைச் சுற்றியுள்ள சுமார் 18 கிராமங்களைச் சேர்ந்த பகுதிகளில் ஆற்றுப் பாசனத்தை நம்பி சம்பா நடவுப்பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, பயிர்கள் கதிர் விடும் நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 20 நாள்களாக பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் முறை வைத்து குறைந்து அளவு தண்ணீர் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. போதிய அளவு தண்ணீர் வராததால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. இதனால் கல்யாண ஓடை வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறந்துவிடக்கோரி அப்பகுதியை சேர்ந்த விவாசயிகள் மேல உளூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஒரத்தநாடு டி.எஸ்.பி., பாரதிதாசன், மண்டல துணை வட்டாட்சியர் அகஸ்டியன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், வருவாய் ஆய்வாளர் ராஜலெட்சுமி, மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.