47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கும்பகோணத்தில் மங்காளியம்மன் திருவிழா

கும்பகோணத்தில் அம்மன் பண்டிகை என்கிற மங்காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:50 am

DIN

கும்பகோணத்தில் அம்மன் பண்டிகை என்கிற மங்காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் உள்ள பவானி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பாவ்ஸார் சத்திரிய சமூகத்தினர் அம்மன் பண்டிகை என்கிற மங்காளியம்மன் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். அதன்படி, நிகழாண்டு மார்கழி மாதத்தை முன்னிட்டு இத்திருவிழா கடந்த 26 -ஆம் தேதி கலச பூஜையுடன் தொடங்கி, அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை காலை மங்காளியம்மன் திருவீதியுலா நடைபெற்றது. பாவ்ஸார் சத்ரிய மண்டலி கட்டடத்தில் இருந்து வீதியுலா தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக காவிரி சக்கரப்படித்துறை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  இதில், திருமணமாகாத இளைஞர் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு பெண் உடையணிந்து, அம்மன் போல வேடமிட்டு தலையில் அம்மன் முகம் மற்றும் கலசம் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் இரவு விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.