மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கேபிள் ஆபரேட்டர்கள் நிலுவைத் தொகையை ஜன. 5-க்குள் செலுத்தினால் அபராதம் தள்ளுபடி

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை ஜன. 5-ம் தேதிக்குள்

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:19 pm

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை ஜன. 5-ம் தேதிக்குள் ஓரே தவணையாகச் செலுத்தினால், அபராதத் தொகை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என ஆட்சியர்  ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் அனலாக் முறையிலான ஒளிபரப்புக்கு கேபிள் டி.வி. கட்டணத்தை உரிய தேதிக்குள் செலுத்தத் தவறியதற்காக விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை தள்ளுபடி செய்தால், செலுத்த வேண்டிய அசல் சந்தா கட்டணத்தை முழுவதுமாக ஒரே தவணையில் செலுத்திவிடுவதாக தமிழக அரசுக்கு  உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி,  சில நிபந்தனைகளுக்குட்பட்டு, அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்வதற்காக அபராதத் தொகை தள்ளுபடி திட்டம்"- 2017 செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அசல் நிலுவைத் தொகை முழுவதையும் ஒரே தவணையில் அரசுக் கணக்கில் செலுத்தும் உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் அனைவருக்கும் நிகழாண்டு அக்டோபர் மாதம் வரை உள்ள அபராதத் தொகை முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படும். நிலுவையில் உள்ள அசல் சந்தா தொகை முழுவதையும் இணையவழி அல்லது வங்கி வரைவோலை மூலமாக ஜன. 5-ம் தேதிக்குள் ஒரே தவணையாகச் செலுத்த வேண்டும்.  பகுதி தொகைக்கான வங்கி வரைவோலை ஏற்கப்படமாட்டாது.
நிலுவையில் உள்ள அசல் சந்தா தொகையை ஒரே தவணையில் செலுத்திய உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது"என்ற சான்றை இணையவழி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
மேலும்,  இச்சான்று பதிவு அஞ்சலில் உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சலுகை ஒரே ஒரு முறைதான் வழங்கப்படும். எனவே,  இந்த வாய்ப்பின் கேபிள் ஆபரேட்டர்கள் பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.