வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவ. 30 வரை காலஅவகாசம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நவ. 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நவ. 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டபடி, 1.1.2018 அன்று தகுதி நாளாகக் கொண்டு அக். 3ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இப்பட்டியல் மீது சிறப்புச் சுருக்கமுறைத் திருத்தம் 2018-க்கான பணிகள் தற்போது நவ. 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, 1999, டிச. 31-ம் தேதி வரை பிறந்தவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதுதொடர்பாக அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில் அல்லது தொடர்புடைய வட்ட அலுவலகங்களில் படிவம் 6-ஐ பெற்று, நிறைவு செய்து அதனுடன் வயதுக்கான ஆதார சான்று நகல், இருப்பிட முகவரிக்கான ஆதார நகலை இணைத்து படிவம் பெற்ற இடத்திலேயே அளிக்கலாம்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6ஏ, பெயர் நீக்க படிவம் 7, பெயர், முகவரியில் திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ-ஐ நிறைவு செய்து அளிக்கலாம்.
நேரில் வர இயலாதவர்கள் உரிய படிவத்தில் நிறைவு செய்து www.elections.tn.gov.in என்ற இணையவழி மூலம் அனுப்பலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 2018, ஜன. 5-ம் தேதி வெளியிடப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...