47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஏபிவிபி அமைப்பைக் கண்டித்து தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பைக்

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:13 am

DIN

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பைக் கண்டித்து, தஞ்சாவூர் ரயிலடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கட்சியின் மாவட்டச் செயலர் ஆர். மனோகரன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கோ. நீலமேகம், சி.ஐ.டியு. மாவட்டச் செயலர் சி. ஜெயபால், துணைச் செயலர் கே. அன்பு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் கே. பக்கிரிசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே. அபிமன்னன், கட்சியின் ஒன்றியச் செயலர் எம். மாலதி, ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலர் எஸ்.எம். ராஜேந்திரன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலர் ஆதி.இல. அறிவுடைநம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல, கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியை எரித்தது, கேரள முதல்வரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக ஏ.பி.வி.பி. அமைப்பைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் நடராஜன்,  சின்னை பாண்டியன், ஒன்றியச் செயலர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.