தஞ்சாவூர் பூம்புகார் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக விற்பனை நிலையத்தில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு விளக்குகள் விற்பனை கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
டிசம்பர் 2-ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறும். இதில் ஏகஜோதி விளக்குகள், ஐந்துமுக விளக்குகள், ஒன்பது முக விளக்குகள், பித்தளை குத்து விளக்குகள், அகல் விளக்குகள், லட்சுமி, கணேசன், பாலாஜி உள்ளிட்ட சுவாமி உருவங்களைக் கொண்ட விளக்குகள், காமாட்சி விளக்குகள், தொங்கு விளக்குகள், தூண்டா விளக்குகள், வாசமாலை, கிளி தொங்கு விளக்கு, ரத தீபம், அடுக்கு தீபங்கள், அஷ்டோத்திர விளக்குகள், கேரள மலபார் விளக்குகள், நவக்கிரக விளக்குகள் போன்ற பலவிதமான விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இங்கு 4 அங்குலம் முதல் பல அடி உயரத்தில் ரூ.100 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான விளக்குகள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் விளக்குகள் அனைத்துக்கும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்.
அனைத்து கடன் அட்டைகளும் சேவைக் கட்டணமின்றி ஏற்றுக் கொள்ளப்படும். வாடிக்கையாளர்கள் பூம்புகார் விற்பனை நிலைய கண்காட்சியில் விளக்குகளை வாங்கி, கைவினைக் கலைஞர்களின் வாழ்விலும் விளக்கேற்றி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவ வேண்டும் என தஞ்சாவூர் பூம்புகார் விற்பனைநிலைய மேலாளர் கே. அருண் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.