எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பாபநாசத்தில்  வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி

பாபநாசம் ஆர்டிபி கலை அறிவியல் கல்லூரி கலையரங்க வளாகத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:01 am

DIN

பாபநாசம் ஆர்டிபி கலை அறிவியல் கல்லூரி கலையரங்க வளாகத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பாபநாசம் வட்டாட்சியர் வெங்கடாசலம் தலைமையில் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில்,  தேர்தல் துணை வட்டாட்சியர் தர்மராஜன் கலந்து கொண்டு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் புதிய வாக்களர்கள் சேர்ப்பு பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகள் பட்டியலையும் செயலியில் பதிவு செய்தல், மற்றும் செயலி இயக்கம் உள்ளிட்டவை தொடர்பான பயிற்சி அளித்தார்.
வருவாய் அதிகாரிகள் பிராங்ளின், மாலா, செல்வம், ராஜேஷ்கிருஷ்ணா,ஜெயமதி,அசோக்குமார் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.