பேராவூரணி பள்ளியில் 166 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் என்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.ஏ.டி.சுந்தர்ராஜன், பொருளாளர் ஆர்.பி.ராஜேந்திரன், துணைத்தலைவர்கள் ஏ.தெட்சணாமூர்த்தி, எம்.சுந்தர்ராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி எம்.எல்.ஏ. மா.கோவிந்தராசு கலந்து கொண்டு 166 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி பேசினார்.
விழாவில் கல்விப் புரவலர் மா.கோ.இளங்கோ, உதவி தலைமையாசிரியர்கள் சோழபாண்டியன், இராஜேந்திரன், ஆசிரியர் இராமநாதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...