குடந்தை பகுதிகளில் சார் ஆட்சியர் ஆய்வு

கும்பகோணம் பகுதியில் வியாழக்கிழமை  திடீர் ஆய்வு மேற்கொண்ட சார் ஆட்சியர் பிரதீப்குமார் டெங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தண்ணீர் மற்றும் பொருட்களை வைத்திருந்த பொதுமக்களை எச்சரித்தார்.
Updated on
1 min read

கும்பகோணம் பகுதியில் வியாழக்கிழமை  திடீர் ஆய்வு மேற்கொண்ட சார் ஆட்சியர் பிரதீப்குமார் டெங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தண்ணீர் மற்றும் பொருட்களை வைத்திருந்த பொதுமக்களை எச்சரித்தார்.
கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியிருந்த கழிவு நீரில் டெங்கு கொசுப்புழு உருவாகியிருக்கிறதா  என அவர் ஆய்வு செய்தபோது அங்கிருந்த பணியாளர்களிடம் மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தினார். அங்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜெயசீலன், விட்டலூரைச்  சேர்ந்த விஜிக்கு ஆகியோருக்கு அளிக்கப்படும் டெங்குக்கான சிகிச்சையை  பார்வையிட்ட அவர், பக்தபுரி தெரு பகுதியில் உள்ள திருமண மண்டப பின்புறம் இருந்த பழைய பொருட்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். தாராசுரம் மீன்மார்கெட் , ஆற்றங்கரைத் தெருவில் டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்த அய்யப்பன் மனைவி பிரியாவைப் பார்வையிட்டு, பின்னர் அப்பகுதியை  ஆய்வு செய்தார். அப்போது டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தேங்கியுள்ள கழிவுநீர், கொசு உற்பத்தியாகும் இடங்களை பார்வையிட்டு , அப்பகுதி மக்களிடம் , தெருவைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், யாராவது கொசு உற்பத்தியாகும் வகையில் கவனமின்றி இருந்தால் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். வட்டாட்சியர்  மாணிக்கராஜ், அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர் அருள்செல்வர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் டேவிட்பாஸ்கரராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com