தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் ஓவியக் கலைக் காட்சியை நடத்துவதற்கு ஓவியங்கள், சிற்பங்கள் கலைஞர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என மண்டல கலை பண்பாட்டு மைய இணை இயக்குநர் இரா. குணசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தற்போது கலை, பண்பாட்டுத் துறை சார்பில் அனைத்து மண்டலங்களிலும் ஓவியக் கலைக் கண்காட்சி நடத்தவும் சிறந்த கலைப் படைப்புக்கு வல்லுநர் குழுக்களைக் கொண்டு தெரிவு செய்து முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளை தலா பத்து கலைஞர்களுக்கு அளித்திடவும் அரசாணை வெளிப்படப்பட்டுள்ளது.
அதன்படி, கலை பண்பாட்டுத் துறை தஞ்சாவூர் மண்டலம் சார்பில் ஓவியக் கலைக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இக்கண்காட்சி நடத்தப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
எனவே கலை பண்பாட்டுத் துறை தஞ்சாவூர் மண்டலத்தைச் சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் தங்களது கலைப் படைப்புகளை உதவி இயக்குநர் அலுவலகம், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பழைய மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியக வளாகம், தஞ்சாவூர் - 613 001 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ நேரடியாகவோ ஏப். 30-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடன் வாங்கலாம் ஆனால்..! மத்திய நிதியமைச்சர் சொன்ன பதில்! | BJP

மின் கட்டண உயர்வு இல்லை! இழப்பு இல்லாமல் எப்படி?செந்தில் பாலாஜி கேள்வி! | DMK | TVK
இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

வணிக சிலிண்டர்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்! மத்திய அரசு அறிவிப்பு!!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


