காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டதை கண்டித்து எஸ்டிபிஐ அமைப்பின் பெண்கள் பிரிவான விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பு சார்பில் கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் தஞ்சாவூர் மாவட்டத் தலைவி சாஜிதாபானு தலைமை வகித்தார். இதில், நம் நாட்டில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளித்திட வேண்டும். நாட்டில் நிகழும் பாலியல் வன்முறைகளை தடுக்க உறுதியான சட்டங்களை இயற்ற வேண்டும்.
காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியின் படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில செயலாளர் குடந்தை தமிழினி கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆயிஷாபேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷர்மிளாபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி பறிப்பு

ஆய்வுக்குள்படாத பள்ளி வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை

பெண்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி மிக முக்கியம்: முதல்வா் ரேகா குப்தா

என்டிஏவில் 2 இணைச் செயலா்கள், இயக்குநா்கள் நியமனம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
