கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியமாக 15,700 ரூபாயை வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலக உதவியாளர்களுக்கு இணையாகக் கிராம உதவியாளர்களுக்கு ரூ. 15,700 கால முறை ஊதியம் வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை கிராம உதவியாளரிடமிருந்து அலுவலக உதவியாளருக்கான பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.கா. தங்கராசு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி. பார்த்தசாரதி, செயலர் வி.பி. மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

காவல்கார கருப்பு மேக்கிங் விடியோ!

இந்த வாரம் கலாரசிகன் - 31-05-2026

கூடலழகர் கோயில் தேரோட்டம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


