திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:29 am

DIN

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்தப்படியாக சிறந்த தலமாகப் போற்றப்படுவதும்,  தமிழ்வேதமாக கருதப்படும் நாலாயிரத் திவ்யபிரபந்தம் விளைந்த தலமாவும்,  ஏழு ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட, பழமை வாய்ந்தது சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலாகும்.
இந்த கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 24ஆம் தேதி ஒரே ஓலைச்சப்பரத்தில்  சாரங்கபாணி, சக்கரபாணி சுவாமி  வீதியுலா வந்தனர். இதையடுத்து சனிக்கிழமை (ஏப்.28) வெண்ணெய்த்தாழி அலங்காரம் நடைபெற்றது.
முக்கிய விழாவான சித்திரைத் திருத்தேர் எனும் பெரிய தேரின்  தேரோட்டம் ஒன்பதாம் நாளான ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம.ராமநாதன், சிட்டி யூனியன் வங்கி உதவி பொதுப் மேலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.  
நான்கு வீதிகளிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாரங்கா, சாரங்கா கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இரவு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்துக்கான் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் இணைந்து செய்திருந்தனர்.
களையிழந்த தேரோட்ட விழா... கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டத்துக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும்  அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்கும் தேரோட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதனால் தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் தேரோட்டம் சீராக நடைபெற இடையூறு ஏற்பட்டது. கும்பகோணம் பெரிய தெரு திருப்பத்தில் தேர் திரும்பும்போது ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்களில் தேரில் உள்ள குதிரை பொம்மைகள் மோதியதில் ஒரு குழந்தை பொம்மை அறுந்து கீழே விழுந்தது. இதனால் பக்தர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. 

பூமியில் புதைந்த தேர் சக்கரம்
தேர் உச்சிபிள்ளையார்கோயில் பின்புறம் சென்றபோது சாலை சரியாக இல்லாததால் கால் அடி பள்ளத்தில் தேர் சக்கரம் பூமியில் பதிந்தது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு தேர் இழுக்கப்பட்டது. இதனால் தேரோட்டம் அரைமணி நேரம்தாமதம் ஏற்பட்டது.
தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பாக அதிர்வேட்டுகள், தாரை தப்பட்டை முழங்க தேர் வடம்பிடிக்கப்படும். ஆனால், இவை அனைத்தும் இல்லாமல் தேர் வடம் பிடிக்கப்பட்டது. 
பல ஆண்டுகளாக தேருக்கான திரைச்சீலைகள், தொம்மைகள் மாற்றப்படாமல் இருந்ததால், தேரில் கட்டப்பட்ட இவை அனைத்தும் வெளுத்து போய் வண்ணங்கள் நிறம் மாறியிருந்தது. இவற்றை மாற்றித்தர பல உபயதாரர்கள் தயாராக இருந்தும் கோயில் நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாக பக்தர்கள் குமுறினர்.
இந்தாண்டு தேரோட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் அனைத்தும் அடுத்த ஆண்டிலாவது சரி செய்யப்பட வேண்டும் என்பதே கும்பகோணம் பகுதி மக்களின் கோரிக்கையாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.