காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பகடிவதை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி கலையரங்க வளாகத்தில் பாபநாசம்

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி கலையரங்க வளாகத்தில் பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான  பகடிவதை தடுப்பு சட்டம் (ராகிங் தடுப்பு சட்டம்) பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு  புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் பாபநாசம்,  மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியும்,  பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவருமான எஸ்.ராஜசேகர் தலைமை வகித்து பகடிவதை தடுப்பு சட்டம் பற்றி விளக்கமளித்தார். 
பின்னர்,  கல்லூரியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு ஆங்கில அகராதி புத்தகங்களை பரிசளித்தார். நிகழ்ச்சியில் பாபநாசம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் என். பாஸ்கரன், செயலாளர் எல்.ஜெயகுமார், அரசு வழக்குரைஞர் ஜி. சரவணன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், கல்லூரி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, கல்லூரி முதல்வர் ஜி. ராஜதுரை வரவேற்றார். நிறைவில் கல்லூரி வேதியியல் துறை விரிவுரையாளர் ஏ. குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சட்டபூர்வ தன்னார்வலர்கள் எஸ்.பி.ராஜேந்திரன், தனசேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.