நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களை முழு அளவிலும், தட்டுப்பாடின்றியும் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஒரத்தநாடு வட்டம், தெற்கு நத்தம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை ஆலோசனைக் கூட்டம் சாமி அய்யன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கட்சியின் கிளைச் செயலாளர் செந்தில் வரவேற்றார். ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் என். சுரேஷ் குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தெற்கு நத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அருகில் பள்ளி மாணவர்கள் நடமாடும் இடத்திலும், கிராமத்தில் பல இடங்களிலும் மின்கம்பிகள் தாழ்வாக தரையைத் தொடும் வகையில் தொங்குகின்றன. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக, தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகளை அகற்றி புதிதாக உயரத்தில் மாற்றித் தர வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களையும் மாற்றி சீரமைத்து தரவேண்டும்.
வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே செயல்படும் நியாய விலைக்கடைக்கு, நிரந்தர பணியாளர்களை நியமித்து தினசரி திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடும்ப அட்டைக்கு வழங்க வேண்டிய அரிசியை 10 கிலோ மட்டும் வழங்காமல், குறைவின்றி முழுமையாக 25 கிலோ வழங்க வேண்டும். பருப்பு, எண்ணெய், சர்க்கரை என அனைத்துப் பொருள்களையும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். பழுதடைந்த ஆழ்துளைக் கிணறு மற்றும் கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளிலேயே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை விரைந்து சீரமைத்து, குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்

நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லையா? ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்போது கவனம்!
தெய்வ தரிசனம்... முன்னோர் ஆன்மா சாந்தியடைய திருக்குடவாயில் கோனேசுவரர்!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


