திமுக தலைவரும், தமிழ்நாட்டின் 5 முறை முதல்வராகவும் இருந்த கருணாநிதியின் உழைப்பை இன்றைய இளம் தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழில் பன்முக ஆற்றல் கொண்ட கருணாநிதி திரைக்கதை - வசனம், சிறுகதை, புதினம், கவிதை, திரைப்பாடல்கள், நாடகம், தொலைக்காட்சித் தொடர், சங்க இலக்கியம் சார்ந்த படைப்புகள், திருவள்ளுவப் பெருந்தகை மீது பற்றும் திருக்குறள் ஆற்றலும் என பன்முக ஆற்றல் கொண்டவர். இவற்றில் காலத்திற்கேற்ப தம்மை புதுப்பித்துக் கொண்டவர்.
அரசியல் போராட்டங்கள், கூட்டுப் போராட்டங்கள், உட்கட்சி சிக்கல்கள் என கடுமையான அன்றாடப் பணிகளுக்கிடையே கலை, இலக்கியச் சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். அரசியலில் அவரின் நினைவாற்றல் வியக்கத்தக்கது. சாதாரணக் குடும்பப் பின்னணியில் வந்த கருணாநிதி, தமிழ் மக்களின் செல்வாக்குப் பெற்ற பெரும் தலைவராக நிலைத்தது பெரும் சாதனை. அவருடைய இந்த சாதனைக்கு அவருடைய உழைப்பே மூலதனம். இளம் தலைமுறையினர் அவரிடமிருந்து உழைப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வப்போது அவர் எழுப்பி வந்த சமூக நீதிக் குரல் என்றும் நினைவில் நிற்கும். அவருடைய மறைவுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘சூரியனுக்கு எப்படி வியா்க்கும்?’ ஓபிஎஸ் கேள்வியால் சிரிப்பலை

சொத்து வரி உயா்த்தப்படவில்லை: சென்னை மாநகராட்சி ஆணையா் விளக்கம்

நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வில் வெளிநாட்டு நன்கொடை மசோதா

ஆா்.எஸ். புரம் மாநகராட்சி பூங்காவில் கருகி வீணாகும் மரக்கன்றுகள்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


