
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி கும்பகோணத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் மு. கருணாநிதி செவ்வாய்க்கிழமை காலமானார். இதையொட்டி தாராசுரம், தாராசுரம் கடைவீதி, கும்பகோணம் புதிய பேருந்து நிலையம், கும்பகோணம் கடைவீதி, பேட்டை தெரு, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், சுவாமிமலை, நகராட்சி அலுவலகம், அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகம், சாக்கோட்டை, உள்ளுர், கருப்பூர் என கும்பகோணம் நகரப் பகுதி முழுவதும் திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், அப்பகுதியில் தொலைக்காட்சி பெட்டிகளை வைத்து திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியை பார்த்தனர்.
கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் கவிதா ராம்மோகன்ராஜ் தலைமையில் கருணாநிதியின் உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திரளான வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.
இதேபோல, ஆங்காங்கே பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பட்டுக்கோட்டையில்....
பட்டுக்கோட்டையில்... பட்டுக்கோட்டையில் பேருந்து நிலையம் பெரியார் சிலையிலிருந்து பெரியகடைவீதி அண்ணா சிலை வரை
நடைபெற்ற அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற மௌன ஊர்வலத்துக்கு நகர திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர். என்.செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், அ.அப்துல் சமது, ந.மணிமுத்து, (திமுக), சுப.ராஜேந்திரன் (அதிமுக), ஆர்.ராமசாமி (காங்கிரஸ்) வி.ஜெயபாரதி (மதிமுக), ஏ.கே.குமார் (தமாகா) வி.முரளிகணேஷ் ( பாஜக) சி. பக்கிரிசாமி ( இந்திய கம்யூனிஸ்ட்), எஸ்.கந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), அ.அண்ணாதுரை (திக), சக்கரவர்த்தி (விடுதலைச் சிறுத்தைகள்), டாக்டர் கே.நியூட்டன் ( ரஜினி மன்றம் ) பி.சதாசிவம் (மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் அண்ணா சிலையை அடைந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதிராம்பட்டினத்தில்... அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அனைத்துக் கட்சி மௌன ஊர்வலத்துக்கு பேருர் திமுக செயலர் ராம.குணசேகரன் தலைமை வகித்தார்.
சேர்மன் வாடி, செக்கடி மேடு, நடுத்தெரு, கடைத்தெரு, பழைய அஞ்சலக சாலை வழியாகச் சென்ற ஊர்வலம் மீண்டும் பேருந்து நிலையம் வந்தடைந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து அனைத்துக் கட்சியினர் மௌன அஞ்சலி செலுத்தினர்.
ஆலத்தூரில்... ஆலத்தூரில் அனைத்துக் கட்சி மௌன ஊர்வலம் ஆர்.ஆர்.ராமசாமி (திமுக) தலைமையில் நடைபெற்றது.
இதில் ஏ.ஆர்.எம்.யோகானந்தம் (காங்கிரஸ்), தங்கராசு (அதிமுக), காரிமுத்து (மதிமுக), கிட்டப்பா (இந்திய கம்யூனிஸ்ட் ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இங்குள்ள அண்ணா சிலையில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் அண்ணா சிலையை வந்தடைந்ததும்
அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





