இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

அதிரையில் இஸ்லாம் சங்கம் சார்பில் தூய்மைப் பணி

அதிராம்பட்டினத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம், இளைஞர் அமைப்பு ஆகியவை சார்பில்  ஒட்டு மொத்த தூய்மைப் பணி அண்மையில் நடைபெற்றது.  

Updated On :23 ஜூலை 2018, 8:40 am IST

அதிராம்பட்டினத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம், இளைஞர் அமைப்பு ஆகியவை சார்பில்  ஒட்டு மொத்த தூய்மைப் பணி அண்மையில் நடைபெற்றது.  
மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு நகரில் டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் 
பரவாமல் தடுக்கும் நோக்கில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. 
இப்பணியில், ஷம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முஹமது அபுபக்கர், செயலர் எம்.ஏ.அப்துல் காதர், இளைஞர் அமைப்புத் தலைவர் எஸ்.அஹமது அனஸ், துணைத் தலைவர் கே.இதிரிஸ் அஹமது, செயலர் எம். எப்.முஹமது சலீம், பொருளாளர் ஏ.ஷேக் அலி, அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
அதிரை புதுமனைத் தெரு, சி.எம்.பி.லைன் ஆகிய பகுதிகளில் மண்டிக் கிடந்த முள்புதர்கள், பாலித்தீன் பைகள், பாட்டில்கள், குப்பைகள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை தோறும் ஷம்சுல் இஸ்லாம் சங்க எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.