மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பட்டுக்கோட்டையில் மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல்

Updated On :23 ஜூலை 2018, 8:41 am IST

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதை பட்டுக்கோட்டை கோட்டை ரோட்டரி சங்கம்,  தஞ்சாவூர்,  பட்டுக்கோட்டை சதுரங்க கழகங்கள் ஆகியன இணைந்து நடத்தின.
இதில் 1-4 ஆம் வகுப்புகள், 5-6 ஆம் வகுப்புகள், 7-8 ஆம் வகுப்புகள், 9-10 ஆம் வகுப்புகள், 11-12 ஆம் வகுப்புகள் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. தலைமை நடுவராக திருவாரூர் ஆர்.கே.பாலகுணசேகரன் செயல்பட்டார்.  போட்டியில் மொத்தம் 460 மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இவர்களில் வெற்றி பெற்ற 125 பேருக்கு பரிசுகளும்,  போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 
 நிகழ்ச்சிக்கு கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் சி.வி.தங்கையன் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.மயில்வாகனன்,  ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் ஆர்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். 
பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் என்.அன்பழகன் காலையில் போட்டியைத் தொடங்கி வைத்து, மாலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். கோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏ.ஆர்.அன்பு, ஜி.ஜெயசீலன், ஜி.இமானுவேல்ராஜ், எம்.வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ஜி.தேவசகாயம் வரவேற்றார். செயலர் பி. கோபிநாதன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.