முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

அரசு இசைக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Updated On :7 ஜூன் 2018, 9:18 am IST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இளங்கலை இசைப் பிரிவில் 3 ஆண்டு காலப் பட்டபடிப்புக்கு அனுமதி நடைபெறுகிறது. இளங்கலை இசைப்பிரிவு பட்டப்படிப்பில் சேருவதற்குக் கல்வித் தகுதி 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
முதுகலை இசைப் பிரிவு 2 ஆண்டு காலப் பட்டப்படிப்புக்குக் கல்வித் தகுதி இளங்கலை இசை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இசை முனைவர் பட்ட ஆய்வு முழு நேரம் மற்றும் பகுதி நேரமாகச் செயல்படுகிறது.
இசை பட்டயப் படிப்புக்குக் கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்றாண்டு கால நாகசுரம், தவில், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய பட்டயப்படிப்புகளுக்கு 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு கால இசை ஆசிரியர் பயிற்சியில் சேருவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் இருபாலரும் சேர்க்கப்படுவர். இசைக் கல்லூரியில் சேர விரும்புவோர் முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு 613204, தஞ்சாவூர் மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.