மகாமக குளக்கரையில் 3 கோயில்களின் தேரோட்டம்
மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணம் காசிவிசுவநாத சுவாமி கோயில், அபிமுகேஸ்வர சுவாமி, கெளதமேஸ்வரர் கோயில் ஆகிய மூன்று


மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணம் காசிவிசுவநாத சுவாமி கோயில், அபிமுகேஸ்வர சுவாமி, கெளதமேஸ்வரர் கோயில் ஆகிய மூன்று கோயில்களின் தேரோட்டம் கும்பகோணம் மகாமக குளக்கரையில் புதன்கிழமை நடைபெற்றது.
புகழ்பெற்ற சிவாலயங்களிலும், பெருமாள் கோயில்களிலும் வெகு விமரிசையாக மாசி மகத் திருவிழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்படி, கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய சிவன் கோயில்களான ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கெளதமேஸ்வரர் ஆகிய 6 சிவன்கோயில்களில் மாசிமக பெருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதேபோல, கடந்த 21 ஆம் தேதி சக்கரபாணி சுவாமி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாள் உற்ஸவமாக விழா நடைபெற்று வருகிறது. மற்ற சிவன் கோயில்களான கொட்டையூர் கோடீஸ்வரசுவாமி கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர் ஆகிய 7 சிவன்கோயில்களில் ஏக தின உற்சவ விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காசிவிசுவநாத சுவாமி கோயில், அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயில், கவுதமேஸ்வரர் கோயில் ஆகிய மூன்று சிவன் கோயில்களின் தேரோட்டம் புதன்கிழமை மகாமக குளக்கரையில் நடைபெற்றது. இதேபோல, வியாழசோமேஸ்வரர் கோயில் தேரோட்டம் அந்தக் கோயிலை சுற்றி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...