மாசிமாத வளர்பிறை சதுர்த்தி: 11 சிவாலயங்களில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு
மாசி மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் கும்பகோணம் பகுதியில் 11 சிவாலயங்களில்


மாசி மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் கும்பகோணம் பகுதியில் 11 சிவாலயங்களில் உள்ள நடராஜபெருமானுக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
சிவாலயங்களில் தனி சன்னதி கொண்டு தெற்கு நோக்கி திருநடன கோலத்தில் தரிசனம் தரும் நடராஜபெருமானுக்கு மார்கழி மாதத்தில் ஆரூத்ரா அபிஷேகமும், புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் அபிஷேகமும் என நட்சத்திர அடிப்படையில் மூன்றும், திதி அடிப்படையில் மூன்றும் மொத்தம் ஆறு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
இதன்படி, புதன்கிழமை மாசி மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம், திருச்சக்திமுற்றம், தாராசுரம், கூகூர், திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம், திருத்தலையாலங்காடு, அவளிவநல்லூர், நாகை மாவட்டம் திருச்சாய்க்காடு, திருப்பள்ளிசரம், மருதூர்,
திருவிடைக்கழி ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களில் நடராஜபெருமானுக்கு கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் அபிஷேகம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...