சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

எல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தஞ்சை கோட்ட எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்கம், அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் ஒரு மணி நேர வேலை நிறுத்த போராட்டம் கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 1:44 am

தஞ்சை கோட்ட எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்கம், அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் ஒரு மணி நேர வேலை நிறுத்த போராட்டம் கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க நிர்வாகி ஆர். சுரேஷ் தலைமை வகித்தார்.  தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் சுந்தரமூர்த்தி, கிளை மேலாளர் பாலசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், வார வேலைநாள்கள் 5 என அறிவித்திட வேண்டும், ஓய்வூதியத் திட்டத்தில் சேர இறுதி வாய்ப்பு வழங்கிட வேண்டும், புதிய பணி நியமனத்தை உடனடியாக நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
இதில் கும்பகோணம் கிளை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.