47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சிகளுடன் முதல்வர் கலந்தாலோசிக்க வேண்டும்

காவிரி வரைவு திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்து கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்.

News image
Updated On :14 மே 2018, 10:34 pm

DIN

காவிரி வரைவு திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்து கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்.
கும்பகோணத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
காவிரி விவகாரத்தில் கால தாமதத்துக்கு பின்னர் திங்கள்கிழமை ஒரு வரைவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகள் கருத்து தெரிவிக்க மே 16 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் அவகாசம் கொடுத்துள்ளது. ஜூன் மாதம் திறந்துவிட கூடிய அளவில் தற்போது மேட்டூரில் தண்ணீர் இருப்பதாகத் தெரியவில்லை. கர்நாடக அரசும் தண்ணீர் தருவதாக தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் ஏற்கெனவே அமைக்கப்பட்டு அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தால் வேண்டிய தண்ணீரை கொடுக்க மேலாண்மை வாரியத்தை கொண்டு நாம் வலியுறுத்தியிருக்க முடியும். அதற்கும் வழியில்லாத நிலைக்கு ஆளாக்கிவிட்டனர்.
நடுவர்மன்ற தீர்ப்பின்படி, தீர்மானிக்கப்பட்ட அளவு தண்ணீரை பெற்றுத்தரக் கூடிய அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கொடுத்தால் மட்டுமே தமிழகத்தின் உரிமையை நாம் பெற முடியும். எனவே, தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு திட்டத்தின் அமைப்பு, அதிகார வரம்பு, செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி, விவசாய பிரதிநிதிகள், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசிக்க வேண்டும். இதில் அனைவரது ஒருமித்த கருத்தை கொண்டு தீர்வை எட்டி, நீதிமன்றத்தில் முறையிட்டால் மட்டுமே நல்லது நடக்கும் என்றார் பாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.