மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

போக்குவரத்துக் கழகத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 9 பேர் இடமாற்றத்துக்கு கண்டனம்

போக்குவரத்துக் கழகத்தில் போராட்டத்தின்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 9 பேர் இட மாற்றத்துக்குத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On :21 மே 2018, 9:11 pm

போக்குவரத்துக் கழகத்தில் போராட்டத்தின்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 9 பேர் இட மாற்றத்துக்குத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை வலியுறுத்தி ஜனவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது கும்பகோணம் கோட்டத்தில் 9 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஒரே ஆணையில் அவர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்து, வேறு இடத்துக்குப் பணியிட மாற்றம் செய்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதுடன், ஏற்கெனவே பணிபுரிந்த கிளைகளிலேயே மீண்டும் பணி வழங்க வேண்டும். ஏழு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊதியப் பிடித்தத்தை வழங்க வேண்டும்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பில் ரூ. 1 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், வாகனங்கள் நிறுத்தும் இடத்தை விரைவாக திறக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய சங்கத் தலைவர் அழகிரி தலைமை வகித்தார். பொதுச் செயலர் துரை. மதிவாணன், செயலர் தாமரைச்செல்வன், பொருளாளர் சுந்தபாண்டியன், துணைத் தலைவர்கள் மாணிக்கம், சிற்றரசு, சேகர், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.