பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

இ - சேவை மையங்களில் ஓய்வூதியர் அட்டை

தஞ்சாவூர் மாவட்ட அரசுப் பொது இ- சேவை மையங்களில் ஓய்வூதியர்களுக்கான அடையாள அட்டைகளைப் பெறலாம் என மாவட்ட கருவூல அலுவலர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.

Updated On :25 மே 2018, 4:04 am IST

தஞ்சாவூர் மாவட்ட அரசுப் பொது இ- சேவை மையங்களில் ஓய்வூதியர்களுக்கான அடையாள அட்டைகளைப் பெறலாம் என மாவட்ட கருவூல அலுவலர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் ஏறத்தாழ 30,000 ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்குப் பணப் பலன்கள் கருவூலம் மூலம் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி, இ- சேவை மையங்களில் அடையாள அட்டை பெறலாம் என அரசு உத்தரவிட்டது. மேலும், வட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி இ- சேவை மையங்களில் புகைப்படம் மற்றும் ஓய்வூதியப் புத்தகத்தை வழங்கி ரூ. 30 கட்டணம் செலுத்தி அடையாள அட்டைப் பெறலாம்.
ஓய்வூதியர் வாழ்நாள் சான்றுகளை அளிக்க நேர்காணல் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேரில் பங்கேற்க முடியாதவர்கள் ஜீவன் பிரமாண் என்ற இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.