ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கிருஷ்ண ஜயந்தி விழா போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

கிருஷ்ண ஜயந்தி விழாக்குழுவின் சார்பில் மாணவ, மாணவிகளுக்காக 33 வது ஆண்டாக நடைபெற்ற

Updated On :8 அக்டோபர் 2018, 8:51 am IST

கிருஷ்ண ஜயந்தி விழாக்குழுவின் சார்பில் மாணவ, மாணவிகளுக்காக 33 வது ஆண்டாக நடைபெற்ற தனித்திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 4  ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பள்ளி மாணவ,  
மாணவிகளுக்கு கடந்த 2 மாதமாக பல்வேறு தேதிகளில் பேச்சுப் போட்டி,  கட்டுரைப் போட்டி,  ஓவியப் போட்டி, கோலப் போட்டி,  மாறுவேடப் போட்டி என பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு கும்பகோணம் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ரோட்டரி உதவி ஆளுநர் செளமியா நாராயணன்,  ரோட்டரி சங்க தலைவர் திருமலைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன் சிறப்புரையாற்றி,  மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். ஜோதிமலை இறைப்பணித் திருக்கூட்ட  நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் அருளாசியுரையாற்றினார். 
விழா ஏற்பாடுகளை விழாக் குழுத்தலைவர் சந்திரபிரபு உள்ளிட்ட விழாக் குழுவினர் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.