கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இறகுப்பந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

கல்வி மாவட்ட அளவிலான இறகுப்பந்து இரட்டையர், ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்திய அதிராம்பட்டினம் காதிர்

Updated On :3 செப்டம்பர் 2018, 3:21 am

கல்வி மாவட்ட அளவிலான இறகுப்பந்து இரட்டையர், ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்திய அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை பாராட்டப்பட்டனர். 
தஞ்சாவூர் பள்ளிக்கல்வித் துறை சார்பில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஏ.அஸ்மிதா, ஏ. ஆமீனா மரியம் ஆகியோர் இறகுப்பந்து இரட்டையர்,  ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்டு,  கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மண்டலப் போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.
இதையொட்டி,  சாதனை புரிந்த 2 மாணவிகளையும் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜெ.அபுல்ஹசன், பள்ளித் தலைமை ஆசிரியை எம்.சுராஜ், உடற்கல்வி ஆசிரியை ஜி.அகிலா மற்றும் ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவிகள் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.