மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள் கவனத்துக்கு...

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள் பரிசுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர்  ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள் பரிசுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர்  ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
பிளஸ்2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற பிள்ளைகளுக்கு முன்னாள் படைவீரர் நலத் துறை மூலம் பரிசுத் தொகையாக ரூ. 5,000 மற்றும் ரூ. 3,000 வழங்கப்படுகிறது. 
அதன்படி 2017 - 2018-ஆம் கல்வியாண்டில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றவர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
எனவே, 2017-18 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள்  செப். 15-ம் தேதிக்குள் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் மதிப்பெண் சான்று,  பள்ளி மாற்றுச்சான்று,  அசல் படை விலகல் சான்று,  அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.