‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

உழவுக் கருவிகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கடைமடை வரை தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் உழவு கருவிகளுடன் கும்பகோணத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கடைமடை வரை தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் உழவு கருவிகளுடன் கும்பகோணத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் நிலமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், அவர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தாலும் பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும். கடந்த 2016 -17 ஆம் ஆண்டிற்கான காப்பீட்டு தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்க வேண்டும். கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் காவிரி நீரைத் திறக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல்,  பூச்சி மருந்து,  உரம் வழங்க வேண்டும். 
ரூ. 25 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தும் அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். டெல்டா பகுதி முழுவதும் பாசன ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
இதில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி,  விதை நெல்,  மண்வெட்டி,  கதிர் அறுக்கும் அரிவாள் உள்ளிட்ட உழவு கருவிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணைத் தலைவர் பிரகதீஸ்வரன்,  மாநில பொருளாளர் கருணாநிதி,  மாவட்ட தலைவர் அயோத்தி மாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.