பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கல்வி உதவித் தொகையை உயர்த்தக் கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்

கல்வி உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் இந்திய மாணவர்

Published On :

கல்வி உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவைக் கலைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசுக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். 
அரசாணை எண் 92-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும். பொதுக் கல்வியைப் பாதுகாக்க வேண்டும். 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். 
பாரதிதாசன் பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ள தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, கல்லூரி நுழைவுவாயில் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பாலகுரு, செயலர் ஜி. அரவிந்த்சாமி, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்த்தி, மாநகரச் செயலர் அருண்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.