6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வேளாண்மைத் துறை பணியாளர்கள் செப். 17 முதல் உண்ணாவிரதம்

சென்னையில் தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி

Published On :

சென்னையில் தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 17-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளனர்.
இதுதொடர்பாக தஞ்சாவூரில் அச்சங்கத்தின் ஆயத்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தோட்டக்கலைத் துறையில் மாவட்டம் முழுவதற்கும் நிர்வாகப் பணிகள் பார்ப்பதற்கும், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகக் கையாளவும், மாவட்டத்துக்கு ஒரு நிர்வாக அலுவலர் பணியிடம் அனுமதிக்கப்படும் என அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை இப்பணியிடம் அனுமதிக்கப்படவில்லை. எனவே, அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையான மாவட்டத் தோட்டக்கலைத் துறைத் துணை இயக்குநர் அலுவலகங்களுக்கு தலா ஒரு நிர்வாக அலுவலர் பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் செப். 17-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது என கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
கூட்டத்தில் மாநிலத் தலைவர் இரா. பன்னீர்செல்வம் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.