நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

மின்கசிவால் குடிசை எரிந்து சேதம்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மின்கசிவால் குடிசை எரிந்து சேதமடைந்தது.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:03 am IST

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மின்கசிவால் குடிசை எரிந்து சேதமடைந்தது.
ஒரத்தநாடு  கக்கரை மேலத்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருணாநிதி (48). சனிக்கிழமை தனது மனைவி சித்திரத்துடன் நூறு நாள் வேலைக்குச் சென்று விட்டார்.
இந்த நிலையில் அவரது வீடு தீப்பற்றி எரிவதாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில்,  கருணாநிதி தனது மனைவியுடன் சென்று பார்த்த போது, வீட்டிலிருந்த  தொலைக்காட்சிப் பெட்டி, மரக்கட்டில், 2 பவுன் நகை, ஆதார் ஆட்டை,  குழந்தைகளின் புத்தகங்கள், வீட்டில் இருந்த ரூ.10,000 ரொக்கம் போன்றவை தீயில் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.