மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தஞ்சாவூர் மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தஞ்சாவூர் உதவிச் செயற்பொறியாளர் ஜோ. சுகுமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அருளானந்த நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், புதுக்கோட்டை சாலை, வ.உ.சி நகர், மேரீஸ் கார்னர், நாஞ்சிக்கோட்டை சாலை, அண்ணா நகர், சாந்தி நகர், பூக்காரத்தெரு, கோரிக்குளம், நிர்மலா நகர், பழைய வீட்டு வசதி வாரியம், பெரியார் நகர், இந்திரா நகர், எழில் நகர், நடராஜபுரம் தெற்கு, டி.பி.எஸ்.நகர், மங்களபுரம், கண்ணன் நகர், பாலாஜி நகர், , ஜெ.ஜெ.நகர், பொன்நகர், பாண்டியன் நகர், சுந்தரம் நகர், எல்.ஐ.சி காலனி விரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது

சேலத்தில் 3 மதுக்கடைகளை அகற்றக் கோரி பெண்கள் மனு






