தஞ்சாவூர் அருகேயுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவிலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்ட அவர், சாக்கில் நெல் பிடிக்கப்படுகிற அளவு சரியாக உள்ளதா என அளவுகோல் மூலம் சரி பார்த்தார். விவசாயிகளிடமிருந்து எவ்வித தாமதமின்றி நெல் கொள்முதல் மேற்கொள்ளவும், நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து, சாலியமங்கலம் மற்றும் திருக்கருக்காவூர் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார். இதில், நெல் மூட்டையின் அளவு, கொள்முதல் செய்யப்பட்ட அளவைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களுடன் ஒப்பிட்டு பார்த்தார்.
மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து, போதுமான அளவு சாக்கு பைகளைக் கையிருப்பில் வைத்துக் கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அப்போது வட்டாட்சியர்கள் மாணிக்கராஜ் (பாபநாசம்), ஜானகிராமன் (கும்பகோணம்) ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (19.05.2026) - கும்பம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - சிம்மம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - ரிஷபம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
