அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
/

வழிப்பறி சம்பவங்கள்: 5 பேர் கைது

தஞ்சாவூரில் இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 7:55 am IST

தஞ்சாவூரில் இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூரில் இரவு நேரத்தில் தனியாக வருபவர்களை வழிமறித்து,  தாக்கி செல்லிடப்பேசி, மோட்டார் சைக்கிள், பணம் உள்ளிட்டவற்றை பறித்துச் செல்வதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், சாலையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்ட போலீஸார் பள்ளியக்ரஹாரம் பகுதியில் ஒரு குழுவினர் இரு நாட்களாக சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடுவது தெரிய வந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் போலீஸார் கண்காணித்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து போலீஸார்  விசாரித்தனர். இருவரும் அளித்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை பிடித்தனர்.
இதில்,  அவர்கள் தஞ்சாவூர் ரயில்வே காலனியை சேர்ந்த சதீஷ்குமார் (26), மானோஜிபட்டி கன்னியம்மாள் நகரைச் சேர்ந்த ஆனந்த் (21), பாண்டியன் (20), திடீர் காலனியைச் சேர்ந்த செல்வமணி (22), காமாட்சி நகரைச் சேர்ந்த விக்ரம் (22) ஆகியோர் என்பதும், 5 பேரும் இரவில் முகமூடி அணிந்து வழிப்பறியில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து, 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.