தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜன. 31-ம் தேதி வெளியிடப்படவுள்ளது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
இந்திய தேர்தல் ஆணைய அனுமதியின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜன. 31-ம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்படவுள்ளது. வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ள பிப். 1-ம் தேதி முதல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் உரிய படிவத்தைப் பெற்று ஆதார ஆவணங்களை அளித்து திருத்தம் செய்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









