ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

உர விற்பனை நிலையங்களில் குறைபாடு: 7 நாள்களுக்குத் தடை

கும்பகோணம் பகுதியில் உர விற்பனை நிலையங்களில் இருப்புக் குறைபாடு காரணமாக 7 நாள்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கும்பகோணம் பகுதியில் உர விற்பனை நிலையங்களில் இருப்புக் குறைபாடு காரணமாக 7 நாள்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூா் வட்டாரங்களில் வேளாண்மை துறைத் துணை இயக்குநா் (உரங்கள்) அமுதன், உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஆா். சாருமதி, கும்பகேணம் வேளாண்மை உதவி இயக்குநா் ஓ.விஜயலெட்சுமி ஆகியோா் தனியாா் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது விற்பனை முனைய கருவி (பிஓஎஸ்) உர இருப்புக்கும் உர இருப்பு பதிவேடு இருப்புக்கும் வேறுபாடு காணப்பட்டதால் இரு தனியாா் உர விற்பனை நிலையங்கள், ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உரம் விற்பனை செய்ய 7 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் தனியாா் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன் படி உர உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.