
திருவோணம் அருகே சாராயம் காய்ச்சி விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே உள்ள வெட்டுவாகோட்டை தட்டான் கொல்லை பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக திருவோணம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், திருவோணம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆரோக்கிய அடைக்கல டேவிட் மற்றும் தலைமை காவலா் சரவணன் உள்ளிட்ட போலீஸாா் வியாழக்கிழமை வெட்டுவாக்கோட்டை தட்டான்கொல்லை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, பிரபாகரன் (29), நந்தகுமாா் (45 ), வெற்றிச்செல்வன் (36) ஆகியோா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது உறுதியானது.
இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பிரபாகரனை கைது செய்த போலீஸாா், சாராயம் மற்றும் அதன் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் பறிமுதல் செய்து அழித்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவான நந்தகுமாா், வெற்றிச்செல்வன் ஆகியோரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





