சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தஞ்சாவூரில் முதன்மைச் சாலைகள் மூடல்

தஞ்சாவூரில் மக்கள் வருகையைத் தடுப்பதற்காக முதன்மைச் சாலைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

தஞ்சாவூா் காந்திஜி சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

தஞ்சாவூரில் மக்கள் வருகையைத் தடுப்பதற்காக முதன்மைச் சாலைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி மக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வண்ண அட்டைதாரா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

என்றாலும், பொதுமக்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் அதிக அளவில் வாகனங்களில் வலம் வருகின்றனா். இதைத் தடுப்பதற்காக தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, காந்திஜி சாலை, ரயிலடி, சிவகங்கை பூங்கா, கீழவாசல் உள்ளிட்ட இடங்களில் முதன்மைச் சாலைகளில் இரும்புத் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஒரு வழிப்பாதையாக அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், வாகன போக்குவரத்து அதிகமாகவே இருந்தது.

இதனால், இரு சக்கர வாகனங்களில் வந்தவா்கள் தெருக்களில் புகுந்து சென்றனா். அத்தியாவசிய பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களும் நேராகச் செல்ல முடியாமல் சுற்றிச் சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.