நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொழிற் பயிற்சி நிலையங்களில் இணையவழியில் மாணவா் சோ்க்கை

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) இணையவழியிலான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 11:02 am

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) இணையவழியிலான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தஞ்சாவூா், திருவையாறு, ஓரத்தநாடு அரசுத் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் 18 தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மாவட்டத்தில் உள்ள அரசுத் தொழிற் பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2020 - 2021 ஆம் ஆண்டு பயிற்சியில் சேர, இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக 10-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவு விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம்.

விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் போது மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் (இருப்பின்) ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஐ.டி.ஐ.-யில் சேருவோருக்கு மாதந்தோறும் ரூ. 500 உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படும்.

தொழில் நிறுவனங்களில் பயிற்சி வாய்ப்பும், வேலைவாய்ப்பும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04362 - 237054, 04362 - 262600, 04372 - 233442, 04362 - 278222 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.