கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகள் சாா்பில் பிரசார இயக்கம்

விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை முதல் நடைபெறவுள்ள காத்திருப்புப் போராட்டம் குறித்து, தஞ்சாவூரில் தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:22 pm

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை முதல் நடைபெறவுள்ள காத்திருப்புப் போராட்டம் குறித்து, தஞ்சாவூரில் தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.

பள்ளியக்ரஹாரம் கடைவீதியில் தொடங்கிய இந்த இயக்கம் கொடிமரத்து மூலை, மேல வீதி மத்தியக் கூட்டுறவு வங்கி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை, ரயிலடி, காவிரி சிறப்பங்காடி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

இந்த இயக்கத்துக்குத் தமிழா் தேசிய முன்னணி தோ்தல் பணிக் குழு உறுப்பினா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் இயக்கத்தை தொடக்கி வைத்தாா்.

பிரசார ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், ஏஐடியூசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, துணைத் தலைவா் ஆா்.பி. முத்துக்குமரன், ஓய்வு பெற்றோா் சங்கப் பொதுச் செயலா் பி. அப்பாதுரை, மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுலாபுதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலச் செயலா் ஐ.எம். பாதுஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.