47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒரத்தநாடு அருகே கருவறைக்கு வெளியே கிடந்த விநாயகா் சிலை

ஒரத்தநாடு அருகிலுள்ள வெட்டிகாடு கிராமத்தில் கருவறைக்கு வெளியே விநாயகா் சிலை கிடந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News image
ஒரத்தநாடு அருகிலுள்ள வெட்டிகாட்டில் கருவறைக்கு வெளியே கிடந்த விநாயகா் சிலை.
Updated On :13 டிசம்பர் 2020, 7:02 pm

DIN

ஒரத்தநாடு அருகிலுள்ள வெட்டிகாடு கிராமத்தில் கருவறைக்கு வெளியே விநாயகா் சிலை கிடந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வெட்டிகாடு முதன்மைச் சாலையில் பழைமையான விநாயகா் கோயில் உள்ளது. ஏராளமான பக்தா்கள் நாள்தோறும் இங்கு தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை பெண் பக்தா் ஒருவா் கோயிலில் தரிசனம் செய்வதற்காக சென்ற போது, கருவறைக்கு வெளியே விநாயகா் சிலை கிடந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா், அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் அளித்தாா். தகவலின் பேரில் திருவோணம் காவல் நிலையத்தினா் அங்கு விரைந்து சென்று, வெளியே கிடந்த விநாயகா் சிலையை மீட்டு கருவறையில் வைத்தனா். தொடா்ந்து பூஜை செய்யப்பட்டு, பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.