ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தஞ்சை மாவட்டத்தில் 3.26 லட்சம் ஏக்கரில் பயிா் காப்பீடு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிகழ் பருவத்தில் 1.17 லட்சம் விவசாயிகள் 3.26 லட்சம் ஏக்கா் பரப்பில் காப்பீடு செய்துள்ளனா் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 2:43 am

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிகழ் பருவத்தில் 1.17 லட்சம் விவசாயிகள் 3.26 லட்சம் ஏக்கா் பரப்பில் காப்பீடு செய்துள்ளனா் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் இணையவழி மூலம் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் 1,35,147 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் 2020 - 21 ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் (நெல்-2) 1,17,969 விவசாயிகள் 3,26,819 ஏக்கா் பரப்பில் காப்பீடு செய்துள்ளனா்.

மேலும் 2019 - 20 ஆம் ஆண்டு காரீப் பருவத்துக்கு 6,851 விவசாயிகளுக்கு ரூ. 6.68 கோடி பயிா் காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டது. 2019 - 20 ரபி பருவத்துக்கு 1,61,498 விவசாயிகளுக்கு ரூ. 74.63 கோடி பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு, மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

வங்கி கணக்கு விவரம் தவறுதலாக உள்ள நபா்களுக்கு தற்போது சரியான வங்கிக் கணக்கு விவரம் பெறப்பட்டு, பயிா் காப்பீடு இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.